ரணிலுடன் ஒன்றரை மணித்தியாலமாக கலந்துரையாடிய மகிந்த! பேச்சுக்கள் வெற்றி பெற்றதாக தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற ஒன்றரை மணிநேர பேச்சுக்கள் வெற்றி பெற்றதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரணிலுடனான சந்திப்பு தொடர்பாக தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதார நிலைமை நெருக்கடி மற்றும் மக்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாகுவும். பேச்சுக்கள் வெற்றியளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இச் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மங்கள சமரவீர, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில், தற்போது உருவாகியுள்ள அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட கருத்தை, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

இச் சந்திப்பில் ஒன்றிணைந்த எதிரணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே மற்றும் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோருடன், மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர்.