என்ன தண்டனையானாலும் ஏற்க தயார்! ஹிஸ்புல்லாஹ்

Report Print Murali Murali in அரசியல்

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயாராக இருப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், அவர்கள் அனைவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதுடன், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இன்று ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தமது பதவியினை இராஜினாமா செய்திருந்தனர். இதற்கான கடிதங்களை இன்று ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி செயலக வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளார். “நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாளை முதல் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இந்நிலையில், தனக்கு எதிரான விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனையானாலும் அதனை ஏற்க தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.