நேர்மறையாக அமைந்த ரணில் – மகிந்த சந்திப்பு!

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு தற்போதுள்ள அரசியல் வேறுப்பாட்டுக்கு ஒரு நேர்மறையான செயற்பாடாக அமைந்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கதில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது.

உயிர்த்த ஞாயிறுக் குண்டுத் தாக்குதல்களின் பின்னரான பொருளாதார மீட்புத்திட்டம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் குறித்தும் இதன் போது பேசப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ஹர்ஷா டி சில்வ, நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்தன, காமினி லொகுகே, உதய கம்பன்பில, பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக, நிதி அமைச்சின் செயலாளர். ஆர்.எச். எஸ் சமரதுங்க, மத்திய வங்கயின ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளதாவது,

“நாட்டின் தற்போதைய நிலைமைகளில் இதுபோன்ற சந்திப்புகள் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க கூடியதாக அமையும்.

எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்த தரப்புடன் மேற்கொண்ட இந்த கலந்துரையாடல் தற்போதுள்ள அரசியல் வேறுப்பாட்டுக்கு ஒரு நேர்மறையான செயற்பாடாக அமைந்துள்ளதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.