இனவாதிகளின் பிடியில் நேற்றுத் தமிழர்கள், இன்று முஸ்லிம்கள்! எம்.ஏ.சுமந்திரன்

Report Print Murali Murali in அரசியல்

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிஷ்டவசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் சகலரும், அந்தப் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்துள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள், நாளை மற்றவர்.

நாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச் சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் இதையே செய்யுமாறு அழைக்கின்றோம்” - என்றார்.