புதிய ஆளுநர் நியமனம் குறித்து ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்!

Report Print Murali Murali in அரசியல்

மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பதிவிக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய ஆளுநர்கள் நாளை நியமிக்கப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான செய்திகள்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட ஆசாதாரண நிலையை அடுத்து, பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.