பேராயரின் செயல் குறித்து மங்கள சமரவீரவின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவு

Report Print Satha in அரசியல்

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவொன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரை சந்தித்து நலன் விசாரிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று சென்றிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பிலேயே அமைச்சர் மங்கள சமரவீர தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பேராயரின் இந்த செயலானது இனங்களுக்கிடையே கொழுந்துவிட்டெரியும் இனவாதத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers