முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவி துறப்பு அரசியல் நாடகம்! விமல் விசனம்

Report Print Ajith Ajith in அரசியல்

முஸ்லிம் அரசியல் வாதிகள் கூட்டாக பதவி விலகியமையானது அரசியல் நாடகமாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ விமர்சித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மட்டுமே பதவி விலகுமாறு வலியுறுத்தியிருந்தோம். எனினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக இராஜினாமா செய்துள்ளனர். இதை குற்றவாளியை பாதுகாக்கும் செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அதுமட்டுமல்ல தனி நபர் இலக்குவைக்கப்படவில்லை, ஒட்டுமொத்த சமூகமும்தான் இலக்குவைக்கப்பட்டது என்ற தவறான தகவலை முஸ்லிம் மக்களுக்கு வழங்கி, அரசியல் இலாபம் தேடுவதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.

அமைச்சர் கபீர் ஹாசீமுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. அவரின் செயலாளராக இருந்த ஒருவர்தான், மாவனல்லையில் புத்தர் சிலையை உடைத்தவர்கள் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்புக்கு வழங்கினார்.

இதனால், அடிப்படைவாதிகள் அவரை சுட்டுக்கொலை செய்ய முயற்சித்தனர். தற்போதுகூட அவர் வைத்தியசாலையில்தான் இருக்கிறார். இந்நிலையில், அடிப்படைவாதிகளை பாதுகாக்கும் வகையில் கபீர் ஹாசீம் எடுத்த இந்த முடிவானது குறிந்த இளைஞனுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக இராஜினாமா செய்யவில்லை. தற்காலிக விடுமுறையிலேயே அவர்கள் சென்றுள்ளனர். பதவி துறப்பு எல்லாம் அரசியல் நாடகமாகும் என்றார் விமல்.

Latest Offers