மஹிந்த சொன்னாலும் மைத்திரிக்கு ஜனாதிபதி வேட்பாளர் சந்தர்ப்பம் கிடையாது – பிரசன்ன

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதற்கு எவ்வித உத்தேசமும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள துர்பாக்கிய நிலைமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடுகம்பொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் எந்தவொரு தரப்பினருக்கும் மீண்டும் அதிகாரத்தை வழங்க மக்கள் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச சொன்னாலும் மைத்திரியை மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைப்பதற்கு தாம் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றமைக்கான பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Latest Offers