முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து பதவியை துறக்க முயற்சித்த மங்கள

Report Print Kamel Kamel in அரசியல்

முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து தனது அமைச்சுப் பதவியையும் ராஜினாமா செய்வதற்கு அமைச்சர் மங்கள சமரவீர முயற்சித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்றைய தினம் அலரி மாளிகையில் கூடியிருந்த போது மங்கள சமரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

1958ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் திகதி பண்டா – செல்வா உடன்படிக்கையை, அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கிழித்தெறிந்தமைக்கு நிகரான நிலைமை முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகுவதன் ஊடாகவும் ஏற்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்பொழுது சரியான விடயத்திற்காக தைரியமாக முதுகெலும்புடன் தீர்மானம் நிறைவேற்றும் வல்லமை பண்டாரநாயக்கவிற்கு இல்லாமல் போனமையே பல தசாப்தங்களாக நாடு துரதிஸ்டவசமான சம்பவங்களை எதிர்நோக்க ஏதுவாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்களுடன் தாமும் பதவி விலகுவதாகவும் அவர்களுக்கு ஆதரவாக வேறும் சிலரும் பதவி விலக வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரும், முஸ்லிம் அமைச்சர்களும் மங்களவை பதவி விலக வேண்டாம் என கோரியதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இனவாதத்திற்கு அடிபணிந்து செயற்படுவது மிகவும் ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers