முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக தெளிவான சாட்சியங்கள் முன்வைக்க வேண்டும்: அமைச்சர் மனோ கணேசன்

Report Print Steephen Steephen in அரசியல்

முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தெளிவாக சாட்சியங்களை வழங்குமாறு அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு, தேசிய மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் ரீதியான சேறுபூசும் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்காது, முஸ்லிம் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தினால், அதற்கான தெளிவான சாட்சியங்களை முன்வைக்க வேண்டும் என அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சம்பந்தமாக ஆப்கானிஸ்தான் நாட்டின் குழுவொன்று இலங்கை வந்து, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

வஹாபிச அரசியலை எப்படி தோற்கடிக்கப்பது தொடர்பிலான அனுபவங்களை இலங்கைக்கு வழங்க ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதற்காக அந்நாட்டின் குழுவினரை இலங்கைக்கு அழைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடிக்க ஆப்கானிஸ்தானின் அனுபவத்தை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers