அரசின் தலை குறிவைப்பு! 3 மணிக்கு முக்கிய கூட்டம்!

Report Print Ajith Ajith in அரசியல்

நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டத் தொகுதியிலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

06, 07 ஆம் திகதிகளுக்கான சபை நடவடிக்கைகள், அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

அதேவேளை, அமைச்சுப் பதவியை ரிஷாட் பதியுதீன் இராஜினாமா செய்துவிட்டதால், அவருக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வழுவிழந்துள்ளது.

எனவே, 18, 19 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறாது. எனினும், இவ்விரு தினங்களிலும் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்குமாறு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜே.வி.பி. கோரிக்கை விடுக்கும் என்று அக்கட்சியின் எம்.பியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசின் தலை குறி வைக்கப்ட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.