முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் தந்திரமாக இருக்கலாம் - கூட்டு எதிர்க்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

றிசார்ட் பதியூதீன் அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையை திரும்ப பெற அவசரப்பட போவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியமையானது மோசடியான தந்திரமாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிகளில் இருந்து விலகினாலும் அவர்கள் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகளை கைவிட்டுள்ளனரா என்ற பிரச்சினை இருக்கின்றது.

இவர்களிடம் இருந்த வாகனங்கள், அலுவலகம் என்பவற்றை கைவிட்டுள்ளனரா?. அல்லது அமைச்சுக்கு மட்டும் செல்லாமல் வீட்டில் மட்டும் இருக்கின்றனரா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers