தெரிவுக்குழுவில் இணையுமாறு மஹிந்த அணிக்கு மீண்டும் அழைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக பதவி துறந்துள்ள நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, சபை முதல்வரான லக்‌ஷ்மன் கிரியல்ல அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது.

இதன்போது விமல்வீரவன்ஸ எம்.பியால் எழுப்பட்ட ஒழுங்குப்பிரச்சினையொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கிரியல்ல இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

“ 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அங்கம் வகிப்பதற்கு கூட்டு எதிரணி ( ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ) எம்.பிக்கள் மறுப்பு தெரிவித்துவருகின்றனர்.

தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகியுள்ளனர். எனவே, தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டு எதிரணி உறுப்பினர்களை அழைக்கின்றேன். எதிர்க்கட்சித் தலைவரும் சபையில் இருக்கின்றார். எனவே, தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்களை பிரேரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.’’ என்றார்.

Latest Offers