அத்துரலியே ரதன தேரரிடம் வாக்குமூலம் பெற தயாராகும் புலனாய்வு திணைக்களம்

Report Print Steephen Steephen in அரசியல்

நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரிடம், வாக்குமூலத்தை பதிவு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது.

அத்துரலியே ரதன தேரர், அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் தொடர்பாக சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட உள்ளது.

றிசார்ட் பதியூதீன், அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அத்துரலியே ரதன தேரர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததுடன் அவர்களை பதவி நீக்குமாறும் கோரியிருந்தார்.

Latest Offers