இலங்கை புலனாய்வாளர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து! எதிர்வுகூறும் மகிந்த

Report Print Jeslin Jeslin in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முக்கியமான தகவல்கள் பகிரங்கமாகியுள்ளதால் புலனாய்வு அமைப்புகளில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இது மில்லேனியம் சிட்டி விவகாரம் போன்று மாறப்போகின்றது. புலனாய்வு துறையினரை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தோன்றச்செய்ததன் மூலம் அவர்கள் குறித்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன இதனால் அவர்களின் உயிர்களிற்கு ஆபத்து.

அரசியல் ஆதாயங்களிற்காக இவ்வாறான விசாரணைகளை வெளிப்படையாக முன்னெடுக்ககூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers