ஐ.தே.கட்சியின் புதிய நாடகம் அரங்கேறியது: பொதுஜன பெரமுன

Report Print Steephen Steephen in அரசியல்

பாதுகாப்பு தொடர்பான முழுமையான பொறுப்பு ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் சட்டமா மற்றும் ஒழுங்கு அமைச்சு நான்கு ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியிடமே இருந்தது என்பதால், பாதுகாப்பு குறித்த பொறுப்பில் இருந்து பிரதமர் உட்பட அரசாங்கம் தப்பிக்க முடியாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாரிய தாக்குதல் நடந்து, மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். அனைத்து மக்களும் இன, மத பேதமின்றி பாதிக்கப்பட்டனர். தம்மை பாதுகாக்க எவரும் இல்லை என்ற மனநிலை சிங்கள மக்களுக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு தரப்பினர் தமது கடமையை சுதந்திரமாக செய்ய இடமளிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு தரப்பினருக்கு அழுத்தம் கொடுத்த சந்தர்ப்பங்களை நாம் பார்த்தோம். கல்பிடியில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் போது சிலரை காப்பற்ற முயற்சித்ததை நாங்கள் பார்த்தோம். ஒருவர் கைது செய்யப்பட்ட போது முன்னாள் அமைச்சர் ஒருவர் இராணுவ தளபதியை தொடர்புகொண்டு விடயங்களை கேட்டதை நாம் அறிவோம்.

தகவல் விசாரிப்பது அழுத்தம் கொடுப்பதே. இதனால், மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி சம்பவம் குறித்து விசாரிக்கவில்லை. அரசாங்கம் இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டது. நம்பிக்கையில்லாமல் போனால், நாட்டுக்குள் அராஜக நிலைமை ஏற்படும். அரசாங்கத்தின் இரண்டு தலைவர்களில் எவர் கூறினாலும் மக்கள் அதனை நம்ப மறுக்கும் நிலைமை ஏற்பட்டது.

அமைச்சர் மற்றும் இரண்டு ஆளுநர்கள் சம்பந்தமான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றியது. இதற்கான கதை சிறிகொத்தவுக்குள் எழுதப்பட்டது அல்லது அலரி மாளிகையில் எழுத்தப்பட்டது. அலரி மாளிகைக்குள் இந்த நாடகம் இயக்கப்பட்டது. இறுதியில் ஊடக சந்திப்பின் மூலம் நாடகம் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டது.

குற்றச்சாட்டை எதிர்நோக்கி சிலர் இருக்கும் போது ஏனைய அனைவரும் கைகளை தூக்கி பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அனைவரும் பதவி விலக வேண்டும் என்று எவரும் கோரவில்லை. இவ்வாறான ஒன்றை எவரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அனுர பிரிதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers