இது நியாயமா...? உச்சக்கட்ட கோபத்தில் நாடாளுமன்றில் சீறிய ரிசாட்

Report Print Jeslin Jeslin in அரசியல்

தலதா மாளிகைக்கு முன்பாக நேற்றைய தினம் நான் பார்த்தேன் மூன்று முஸ்லிம் இளைஞர்களை காட்டு மிராண்டித் தனமாக அடித்து துன்புறுத்துவதை நான் பார்த்தேன். இது எந்த மார்க்கத்தில் இருக்கின்றது. இது தர்மமா? என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அவசர காலச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது நேற்றைய தினம் கண்டியில் ஒரு சாரார், வாருங்கள் இந்த நாட்டை அழிப்போம், கொல்லுவோம், பயங்காட்டுவோம், நாட்டின் நிம்மதியை தொலைப்போம், இந்த நாட்டை குட்டிச்சுவராக்குவோம், 83 போல மீண்டும் ஒரு இனக் கலவரத்தை தூண்டி இந்த நாட்டை நாசமாக்குவோம் என அழைக்கின்றார்கள்.

இதை எல்லாம் இராணுவத்தினர், பொலிஸார், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத் துறையினர் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இது நியாயமா என நான் கேட்கின்றேன். இதை ஏன் அனுமதிக்கின்றீர்கள் என கேட்கின்றேன்.

கடந்த ஈஸ்டர் தின ஐ.எஸ். தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அதனுடன் தொடர்புடையவர்களுக்கு உச்சப்பட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்குங்கள். அல்லது அதற்கும் மேல் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்காதீர்கள்.

பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்களை சிறையிலடையுங்கள், அவர்களுக்கு தண்டனை வழங்குங்கள். ஆனால் அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்காதீர்கள்.

தலதா மாளிகைக்கு முன்பாக நேற்றைய தினம் நான் பார்த்தேன் மூன்று முஸ்லிம் இளைஞர்களை காட்டு மிராண்டித் தனமாக அடித்து துன்புறுத்துவதை நான் பார்த்தேன். இது எந்த மார்க்கத்தில் இருக்கின்றது. இது தர்மமா?

நோன்பாளிகளை அவ்வாறு அடித்து துன்புறுத்துகின்றார்கள். அதற்கு தண்டனையும் இல்லை சட்டமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers