பதவி விலகிய முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனங்களில்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் பதவிகளில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் பின்வரிசையில் அமர போவதாக கூறிய, முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் அமர்ந்து இருந்தனர்.

முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வந்து தனக்கு ஒதுக்கப்பட்ட முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்தார்.

இது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, ரிசார்ட் பதியுதீன் கட்சி தலைவர் என்பதால், அவர் முன்வரிசை ஆசனத்தில் அமர முடியும் எனக் கூறினார்.

அத்துடன் முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகியுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் அறிவித்த பின்னர் ஆசனங்கள் மாற்றயமைக்கப்படும் எனவும் நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers