கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்பட்டதா? லக்ஷ்மன் கிரியெல்ல விளக்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவில்லை எனவும் அதனை கூட்டு வர்த்தகமாக நடத்தி வருவதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 27/2 கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரச நிறுவனங்களை முன்னேற்ற பணம் இல்லை எனவும் நாட்டின் தேசிய வருமானம் கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்தவும் போதவில்லை எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.