முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை: தேசிய சுதந்திர முன்னணி

Report Print Steephen Steephen in அரசியல்

முஸ்லிம் அமைச்சர்களுடன் எதிர்காலத்தில் அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்காது என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

பிற்றகோட்டேயில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ரிசார்ட் பதியுதீன் அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதால், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers