சில குழுக்கள் நல்லிணக்கத்திற்கு தடையேற்படுத்துகின்றன: நவீன் திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியல் இலாபம் பெற்றுக்கொள்வதற்காக சில அரசியல் குழுக்கள் நல்லிணக்கத்திற்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்படுவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் என்ற வகையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பெரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக மக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்வதே இந்த குழுக்களின் நோக்கம். மக்கள் இந்த நிலைமையை அடையாளம் கண்டு அதனை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் நிலைமையை எதிர்கொள்ளும் பலம் உள்ளது எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers