நாடு தீப்பற்றி எரியும் போது சுதந்திரக்கட்சியின் செயலாளர் பதவிகளை பகிர்ந்துக்கொள்வது பற்றி பேசுகிறார்: ஜீ.எல்.பீரிஸ்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடு தீப்பிடித்து எரியும் நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிகளை பகிர்ந்து கொள்வது பற்றி பேசுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கூட்டணியில், பதவிகளை பகிர்ந்துக்கொண்டு தற்போதைய ஜனாதிபதி சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்க வேண்டும் என தயாசிறி ஜயசேகர யோசனை முன்வைத்துள்ளார்.

நாடு தீப்பற்றி எரியும் போது பதவிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமா என அவரிடம் கேள்வி எழுப்புகிறேன்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், ஜனாதிபதி பதவியை வைத்துக்கொண்டு எதனையும் செய்ய முடியாது எனக் கூறும் தயாசிறி, தற்போதைய ஜனாதிபதிக்கு மீண்டும் அந்த பதவியை வழங்க வேண்டும் என ஏன் கோருகிறார்?.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் சாட்சியங்கள் மூலம் ஈஸ்டர் தாக்குதலுக்கு 12 நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்தது தெரியவந்தது. இரண்டு மாதங்கள் பாதுகாப்புச் சபைக் கூடவில்லை. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை அரசியல் பந்தாக மாற்றியுள்ளனர்.

நாட்டில் ஒரு அரசாங்கமே இருக்கின்றது. இரண்டு தரப்பினரும் இணைந்து கூட்டாக நாட்டை ஆட்சி செய்யுமாறே மக்கள் கூறினர். அதனை விடுத்து மோதிக்கொள்ளுமாறு கூறவில்லை. ஒரு தரப்பை சுத்தப்படுத்தி விட்டு மறு தரப்பை விமர்சிக்கும் அவசியமில்லை எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers