விலகிய அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பார்கள்: நளின் பண்டார

Report Print Steephen Steephen in அரசியல்

பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றால், ஒரு மாத காலத்தின் பின்னர், அவர்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அமைச்சரவை இது சம்பந்தமாக இன்று கலந்துரையாடியது. முறைப்பாடுகள் இருந்தால், அதனை முன்வைக்க மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரிசார்ட் பதியுதீன், அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் சம்பந்தமாக முறைப்பாடுகளை முன்வைக்க மூன்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழு, பொலிஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காதவர்கள மீண்டும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers