தேசிய கொள்கை உருவாக்க இணங்கிய எதிர்க்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டிற்குள் நீண்டகால தேசிய , மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவின் ஊடாக மக்களின் கருத்துக்களை அறிந்து தேசிய மற்றும் மத சகவாழ்வை உறுதிப்படுத்தும் பரிந்துரைகளை அமுல்படுத்தும் நோக்கிலான விசேட கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விசேட தெரிவுக்குழுவின் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

மேலும் அத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.

Latest Offers