வடக்கு ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிய இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் (David McKinnon) வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஆளுநரின் இல்லத்தில் இன்றைய தினம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வட பகுதி சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆராயப்பட்டது.

வட மாகாண மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் எவ்வகையிலான துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக கனடா அரசாங்கம் வழங்கவேண்டிய உதவிகள் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டது.

இதேவேளை, கனேடிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து யாழ்ப்பாண கல்வியில் வளர்ச்சி நிலையினை அடைவதற்கு மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன் அகதிகள் பிரச்சனை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்தாகவும் ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Latest Offers