அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Report Print Kamel Kamel in அரசியல்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் எதிர்வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தவிர்க்க முடியாமை காரணமாக அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜே.வி.பி கட்சி நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தது.

இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, விவாதம் தொடர்பில் திகதி நிர்ணயம் செய்யப்பட்டதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Latest Offers