கட்டுநாயக்கா வந்த இந்திய பிரதமர்

Report Print Vethu Vethu in அரசியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஒரு நாள் விஜயமாக இலங்கை வரும் மோடி இன்று காலை 11 மணியளவில் அவர் விமான நிலையடைத்தை வந்தடைந்துள்ளார்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 001 என விமானத்தில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்திய பிரதமரை வரவேற்பதற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாயலத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், அதனை பார்வையிடுவதற்காக இந்தியப் பிரதமர் அங்கு செல்லவுள்ளார்.

Latest Offers