முடிந்தது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம்

Report Print Dias Dias in அரசியல்

நான்கு மணிநேர குறுகிய விஜயமாக இலங்கைக்கு வந்த மோடி இன்னும் சிறிது நேரத்தில் இலங்கையிலிருந்து புறப்பட்டு செல்கிறார்.

இலங்கை வந்த மோடியை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றிருந்தார்.

அங்கிருந்து கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு இருநாட்டு பிரதமர்களும் காரில் பயணம் செய்திருந்தனர்.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய அஞ்சலி முடிந்ததும், காலி முகத்திடலில் இந்திய பிரதமருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி மாளிகையில் மரநடுகை, இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது.

பின்னர் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தனித்தனி சந்திப்புக்கள் இடம்பெற்றன.

இதையடுத்து, தூதரகத்தின் வெளிப்புறத்தில் இந்திய சமூகத்தினர் மத்தியில் சிறிய உரையாற்றிய மோடி, இலங்கையிலிருந்து புறப்பட்டு செல்கிறார்.

விமான நிலையத்திலிருந்து வரவேற்று, வழியனுப்பி வைப்பது வரையான பயணங்களிலேயே மோடிக்கும், ரணிலுக்குமான பேச்சுக்கள் நடந்தன. இன்னும் சிறிது நேரத்தில் மோடி இலங்கையிலிருந்து புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானத்தில் மீண்டும் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Latest Offers