பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி

Report Print Dias Dias in அரசியல்

இலங்கைக்கு வருகை தந்தமைக்கு நன்றி, இந்த விஜயத்தின் மூலம் நீங்கள் எம்முடைய உண்மையான நண்பன் என்பதை நிரூபிக்கிறீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்,

இலங்கைக்கு வருகை தந்தமைக்கு நன்றி, இந்த விஜயத்தின் மூலம் நீங்கள் எம்முடைய உண்மையான நண்பன் என நிரூபிக்கிறீர்கள்.

இலங்கை தொடர்பாக உங்கள் மதிப்பையும், ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் நான் மிகவும் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி,

கடந்த 10 நாட்களில் நான் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கின்றேன்.

பயங்கரவாதம் என்பது ஒரு கூட்டு அச்சுறுத்தலாகும். எனவே ஒற்றுமையாகவும், ஒருமித்த நிலைப்பாட்டுடனும் அவற்றுக்கு எதிராக செயற்பட வேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு இந்தியா தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers