எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தவை சந்தித்த நரேந்திர மோடி

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, முதலாவது வெளிநாட்டு விஜயமாக நேற்று மலைத்தீவு சென்றிருந்தார்.

அங்கு மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சேலியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இதனையடுத்து இன்று முற்பகல் இலங்கை புறப்பட்டு வந்தார்.

Latest Offers