மஹிந்த அணியையும் இந்தியாவுக்கு வருமாறு மோடி நேரில் அழைப்பு

Report Print Rakesh in அரசியல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொணடனர்.

இதன்போது பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல், பாதுகாப்பைப் பலப்படுத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு தேவை என இரு தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

அதேவேளை, விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த அணியினருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

Latest Offers