ரணிலுக்கு மோடி வழங்கியுள்ள வாக்குறுதி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பணிகளுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

மாலைதீவுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று முற்பகல் இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விமான நிலையம் சென்று வரவேற்றார்.

இந்நிலையில், பெரும் வரவேற்போடு கொழும்பு வந்தடைந்த அவர் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இதன்பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்று குறுகிய நேரத்திற்குள் இலங்கையின் முக்கியமான அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நரேந்திர மோடி விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான இருத்தரப்பினரதும் ஒத்துழைப்பு தொடர்பிலும் உலக பயங்கரவாத செயற்பாடுகள், அதனை ஒழிக்க எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பணிகளுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் நரேந்திரமோடி ரணிலிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

Latest Offers