மோடி வழங்கியுள்ள வாக்குறுதி! குறுகிய நேரத்தில் சம்பந்தன் கூறியது என்ன? தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

மாலைதீவுப் பயணத்தை முடித்து கொண்டு நேற்று முற்பகல் இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றிருந்தார்.

இந்நிலையில், பெரும் வரவேற்போடு கொழும்பு வந்தடைந்த நரேந்திர மோடி கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இதன்பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்று குறுகிய நேரத்திற்குள் இலங்கையின் முக்கியமான அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதனையடுத்து தனது பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானத்தில் மீண்டும் இந்தியா நோக்கி புறப்பட்டு சென்றார்.

இரண்டாவது தடவையாக இந்திய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மோடி முதன்முறையாக இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளின் தொகுப்பு இதோ,