பயங்கரவாத செயற்பாடுகளை குறுகிய காலத்தில் முடிவுக்கு கொண்டு வரலாமென கூறுபவர் முட்டாள்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் பாதுகாப்பு நிலைமை இன்னும் சாதாரண நிலைமைக்கு திரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை நிறைவேற்றி சபாநாயகர் நியமித்துள்ள ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு சட்ட ரீதியான தெரிவுக்குழு.

ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்டு வருகிறது. அதனை மற்றவர்களுக்கு தேவையான வகையில் மாற்ற முடியாது.

அத்துடன் நாடாளுமன்ற விவகாரங்களுக்கு அழுத்தம் கொடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை. தெரிவுக்குழுவின் விசாரணைகள் முடிவடைந்த பின் உண்மை என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

உரிய பாதுகாப்பு இல்லாமல் இருந்த காரணத்தினாலேயே பெரும் எண்ணிக்கையிலான மக்களின் உயிர்கள் நாட்டுக்கு இல்லாமல் போனது.

இதற்கான பொறுப்பில் இருந்து ஜனாதிபதி தப்பிக்க முடியாது. அரசாங்கத்தில் உள்ள ஏனைய தரப்பினரும் தப்ப முடியாது.

சிலர் கூறுவது போல் நாட்டிற்குள் இருக்கும் பயங்கரவாத செயற்பாடுகளை குறுகிய காலத்தில் முடிவுக்கு கொண்டு வர முடியாது.

அப்படி முடியும் என்று எவராவது கூறினால், அவர் முட்டாள் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.