மோடியால் நீங்கியது இலங்கை தொடர்பான அச்சம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இலங்கையின் பாதுகாப்பு குறித்து வெளிநாடுகளிடையே அச்ச நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ஏனைய நாடுகளின் மத்தியில் இருந்த பாதுகாப்பு அச்சத்தை இல்லாமல் செய்ப்பட்டுள்ளது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் எங்களின் வேட்பாளர் தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்பட வில்லை. ஆனால் உரிய நேரத்தில் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers