நாடாளுமன்ற விவகாரங்களில் தலையிடும் உரிமை ஜனாதிபதிக்கு கிடையாது

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தின் விவகாரங்களில் தலையிடும் உரிமை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு சம்பந்தமாக ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒரு விடயம் தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படடால், உயர் பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் கட்டாயம் அதில் கலந்துக்கொண்டு பதிலளிக்க வேண்டும். அந்த விசாரணை நடவடிக்கைகளில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தலையிட முடியாது. அவருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது எனவும் விஜேபால ஹெட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers