மலையக மக்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று வெற்றி

Report Print Gokulan Gokulan in அரசியல்

40 வருட சலுகை அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து நான்கு வருடங்களில் மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அமைச்சர் திகாம்பரம் தலைமைத்துவமளித்து செயற்பட்டுள்ளமை வரலாற்று வெற்றி என மஸ்கெலியா பிரதேசசபையின் உறுப்பினர் கே.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

சாமிமலை கவரவில பீ பிரிவில் அமைக்கப்பட்டுள்ள 17 வீடுகளின் திறப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் சலுகை காட்டியே மலையக மக்களிடம் அரசியலை முன்னெடுத்தனர். காலம் மாறி 4 வருடங்களில் அமைச்சர் திகாம்பரம் உரிமைசார் விடயங்களை முன்னெடுத்தமை மலையக மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும்.

இவ்வெற்றியினுடாக பல விடயங்களை அனுபவித்து வருகின்றோம். மலையக மக்கள் பெற வேண்டிய இன்னும் பல உரிமைசார் விடயங்களை வெற்றி கொள்ள அமைச்சர் திகாம்பரத்தின் அரசியல் தொழிற்சங்க விடயங்களுக்கு ஆதரவை வழங்க அணிதிரள வேண்டும்.

மாநெலி வட்டாரத்தில் அரசியல் ரீதியாக பலம் பெற்றிருக்கின்ற நாம் தொழிற்சங்க ரீதியாகவும் பலம் அடைந்துள்ளோம். இதனை வலுப்படுத்தி தொடர்ந்து பயணிப்போம் என தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் உதயகுமார், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.ராம், சரஸ்வதி சிவகுரூ, பொது செயலாளர் பிலிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers