இனங்களுக்கு இடையிலான நெருக்கடி நாட்டை பாதிக்கும்

Report Print Steephen Steephen in அரசியல்

இனங்களுக்கு இடையில் காணப்படும் நெருக்கடி இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளுக்கு பாதிப்பாக அமையக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால், நாட்டில் வாழும் அனைவருக்கும் பொதுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டில் யுத்தம் நடந்தது. போரை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தை நடத்துமாறு சில மேற்குலக நாடுகள் கூறின.

அந்நாடுகள் பணத்திற்காகவும் போரிட ஆயுதங்களை வழங்கவில்லை. அப்படியான சூழ்நிலையில் பல முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு உதவின.

இதனை நாங்கள் மறந்துவிடக் கூடாது. அந்த முஸ்லிம் நாடுகள் தற்போதும் எம்முடன் உள்ளளன எனவும் அவர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers