முஸ்லிம் அமைச்சர்களின் அழுத்தங்கள் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சம்பந்தமான தகவல்கள் 2015ஆம் ஆண்டு முதல் கிடைத்து வந்த நிலையில், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதமைக்கான பொறுப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு - டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களிடம் இருந்தது.

2015ஆம் ஆண்டு முதல் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

முஸ்லிம் அமைச்சர்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.