கோத்தபாய ராஜபக்சவை பார்வையிட சிங்கப்பூர் செல்லும் ரணில்

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்ய உள்ளார்.

சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் கோத்தபாய ராஜபக்ச சிகிச்சை பெற்று வருகின்றார்.

கோத்தபாயவின் சுகநலன்களை விசாரித்தல் மற்றும் சில தனிப்பட்ட காரணிகளுக்காக பிரதமர் சிங்கப்பூருக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பிரதமரும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இன்று நள்ளிரவு சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

சிங்கப்பூரில் பிரதமர் ரணில் மருத்துவ பரிசோதனை ஒன்றையும் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோத்தபாயவைத் தவிர சிங்கப்பூரில் வேறும் சிலருடனும் பிரதமர் சந்திப்புக்களை நடத்த உள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.