முஸ்லிம் எம்.பிக்கள் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சு

Report Print Gokulan Gokulan in அரசியல்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தங்களது இராஜினாமாக்களின் பின்புலம் பற்றி விளக்கமளித்தனர்.

தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகள் மற்றும் உண்ணாவிரதத்தின் போது நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் எழுந்தமையினாலேயே அமைச்சர்கள் பதவி விலக நேரிட்டதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றார்கள்.