கோதபாய ராஜபக்ச தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நெருங்கிச் செயற்பட்டார்

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் மிக நெருக்கமாக செயற்பட்டார் என மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரi நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையான போது அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கோதபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் அதிகளவில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினரை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தியிருந்தார்.

கோதபாயவின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் போராட்டங்களை நடத்தியிருந்தனர். சாலி என்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் Nதிசய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களுடன் நெருக்கமாக பழகியிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் புலனாய்வுப் பிரிவினர் எனக்கு 500 மில்லியன் ரூபா பணம் வழங்க முயற்சித்தனர்.

நாட்டை விட்டு வெளியேறினால் 500 மில்லியன் டொலர் வழங்குவதாக, என்னை தடுப்புக் காவலில் வைத்திருந்த போது புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரின் ஊடாக தகலவல் பரிமாற்றப்பட்டது. இராணுவத்தின் பணமே இவ்வாறு எனக்கு வழங்கப்படவிருந்தது.

இந்த விடயங்கள் பற்றி முறைப்பாடு செய்திருந்தால் வெள்ளை வான் வந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்றே அவர்கள் எதிர்பார்த்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.