புதிய அமைச்சர்களை ஏற்றுக்கொள்ள மறுத்த மைத்திரி! தொடரும் முறுகல் நிலை

Report Print Vethu Vethu in அரசியல்

சமகால அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையிலான முறுகல் நிலை தொடர்ந்து வருவதாகவே தெரிய வருகிறது.

கடந்த வாரங்களில் நாட்டில் எழுந்த பாதுகாப்பு நெருக்கடி காரணமாக முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருந்தனர்.

அவர்களுக்கு பதிலாக பதில் அமைச்சர்களை நியமிப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

பதில் அமைச்சர்களாக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் பெயர் பட்டியல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் அதனை நிராகரித்த ஜனாதிபதிக்கு தான் விரும்பியவர்களை பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளார்.

ஐ.தே.கட்சியினால் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோரின் பெயர்கள் இந்த பதில் அமைச்சர்கள் நியமனத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

பதில் அமைச்சர்கள் நியமனத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை, அரசாங்கத்தில் காணப்படும் மோதல் நிலையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest Offers