அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெறாவிட்டால் அரசாங்கம் இல்லை: ஜீ.எல்.பீரிஸ்

Report Print Ajith Ajith in அரசியல்

அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்பாராக இருந்தால் அல்லது அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெறாவிட்டால் அரசாங்கம் ஒன்று இல்லையென்றே அர்த்தம் என பொதுஜனபெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தமக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தும் வரை அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த முடியாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதன்படி நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவில்லை.

எனவே உடனடியாக பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers