மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கை: மனுஷ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

மக்களுக்கு கூடியளவான நிவாரணங்களை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலைகளை குறைத்து விட்டு ஏனைய பொருட்களின் விலைகளை அதிகரிப்பதால், மக்களுக்கு நிவாரணம் கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

காலியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எரிபொருள் விலைகளை எடுத்துக்கொண்டால், கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் குறைந்தவிலையில் எரிபொருளை வழங்குகிறது.

உலக சந்தையில் எரிபொருள் விலைக்கு அமைய நாட்டில் எரிபொருள் விலை குறைய வேண்டும். டொலருக்கு நிகரான விலைகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். எரிபொருள் விலையை மாத்திரம் குறைத்து விட்டு, ஏனைய பொருட்களின் விலைகளை அதிகரித்தால் அதில் பயனில்லை.

அபிவிருத்திகளை நிறுத்தாது, சமநிலையான அபிவிருத்தியும் பொருளாதாரமும் இருக்க வேண்டும். எரிபொருள் விலை அதிகரிப்பதால் பெரிதாக சத்தமிட தேவையில்லை. இந்த மாதம் அதிகரித்த எரிபொருளின் விலை அடுத்த மாதம் குறையலாம் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers