ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமையை சவாலுக்குட்படுத்தி முன்வைக்கப்பட்ட மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தொடர்பில் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிட்டதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்க மீதான குறித்த வழக்கு ஜயந்த ஜயசூரிய, விஜித் மல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.