பதவி விலகலில் ஏற்பட்டுள்ள சந்தேகம்! அரசியல் தலையீட்டினால் நிகழ்ந்ததா?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அரசியல் செல்வாக்கு காரணமாக அரச புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவர் சிசிர மெண்டிஸ் ராஜினாமா செய்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் ராஜினாமா செய்தமை தொடர்பாக பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

அரசியல் செல்வாக்கு காரணமாக அரச புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவரின் ராஜினாமா செய்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உளவுத்துறையின் குறைபாடுகள் அல்லது பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்காதமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் காரணமாக பதவி விலகுவதாக அவர் அறிவித்திருந்தால் அது நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்க் கூடியது.

ஆனால் இந்த ராஜினாமாவில் ஒருவரது தலையீடு அல்லது அரசியல் அழுத்தம் இருப்பதாக பெரும்பாலானவர்களிடம் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே இவ்வாறான செயற்பாடுகளினால் உளவு துறை சுயாதீனமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.