தெரிவுக்குழு தடையின்றி இயங்கும்! எவர் கலைத்தாலும் முடியாது: சுமந்திரன் பதிலடி

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு தடையின்றி இயங்கும் என தெரிவுகுழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டதுடன் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மைத்திரியின் குறித்த தீர்மானம் தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது 3 மாத காலம் குறிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட நிலையில் அந்த காலப்பகுதி வரையில் தொடர்ந்தும் இயங்கும்.

நாடாளுமன்றம் இந்த தெரிவுக்குழுவை கலைத்தாலே தவிர வேறு யாராலும் இதனைக் கலைக்க முடியாது.

மேலும், பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு அரசியல் யாப்பில் இடமிருக்கின்றது என சுமந்திரன் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.