ரணிலை சந்தித்துள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கான ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமை மற்றும் அதற்கு கையாண்ட நடைமுறைகள் சம்பந்தமாக பிரதமர், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கியுள்ளார்.

இதனிடையே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் உண்மையான பயங்கரவாதிகளை தண்டிக்க உரிய கொள்கையை உருவாக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸார் மற்றும் சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் அமை்சசர்கள் திலக் மாரப்பன மற்றும் தலதா அத்துகோரள ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் உண்மையான பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்கவும் சிறிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.