மைத்திரியோடு முரண்பாடுகளை வளர்க்கும் ரணில் அரசு!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அவர்களது குறிக்கோள் நிறைவடையும் வரை முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அமைச்சரவை கூடி ஆராயும். எனினும் நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்துரைத்த அவர், மக்களைப் பற்றி சிந்திக்காது முட்டாள் தனமாக ஐக்கிய தேசிய கட்சி செயற்பட்டுக் கொண்டிருகின்றது. தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் முரண்பட்டுக் கொண்டு பாரிய பிரச்சினைகளை ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றது.

தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து கூட்டு எதிர்கட்சியும் ஆதரவளித்தது. தற்போது ஜனாதிபதியை இலக்கு வைத்து ஐக்கிய தேசிய முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அவர்களது குறிக்கோள் நிறைவடையும் வரை முன்னெடுக்கப்படும்.

அவர்களின் இந்த நிலைமை தொடர்ந்தால் அதனால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் ஸ்திரமான நிலையை மீண்டும் சீர்குழைக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி செயற்படுகின்றது.

பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இன்று நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.